திருச்சி அறிவுத்திருக்கோவில்

உலக சமுதாய சேவா சங்கம் – திருச்சி மண்டலம்
திருச்சி மண்டலம் 2006ம் ஆண்டு துவங்கப்பட்டாலும் திருச்சி பகுதியில் மனவளக்கலை மன்றங்களின் செயல்பாடுகள் பற்றி சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்.
நமது அருட்த்ந்தை மகரிஷி அவர்கள் திருச்சி நகருக்கு முதன்முறையாக 1980ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி வருகை தந்து மூன்று நாட்கள் தங்கியிருந்து நிகழ்ச்சிகள்/பயிற்சிகள் நடத்தினார்கள்.
அருட்தந்தையை திருச்சிக்கு அழைத்துவந்து மன்றம் துவக்கிய பெருமை அ/நி.ஜெயப்பிரகாஷ் அவர்களையே சேரும்.
மார்ச் 1980 அன்பொளி இதழில் வந்த திருச்சி கிளை மன்றம் துவக்கப்பட்ட செய்தி கீழே தரப்பட்டுள்ளது –

திருச்சி பொன்னகரில் ஆரம்பிக்கப்பட்ட கிளை சங்கம் வளர்ச்சி பெற்று தமிழ்நாடு டூரிஸ்ட் ஹோம், தில்லை நகர், பெல் போன்ற இடங்களில் தவமையங்கள் நிறுவப்பட்டு 22-2-1984ல் திருச்சி BHELல் மகரிஷி அவர்களால் மன்றம் துவக்கப்பட்டது.
மகரிஷி அவர்கள் 1980 தொடங்கி 1997 வரை 15 முறைகள் திருச்சி பகுதிக்கு வந்திருந்து அருட்பணியாற்றினார்கள்.
பின் அறக்கட்டளைகளாக BHEL, பெரம்பலூர், அரியலூர், மணப்பாறை, ஸ்ரீரங்கம் போன்ற இடங்களில் மனவளக்கலை பயிற்சிகள் மக்களுக்குத் தரப்பட்டன.
26-6-2006 அன்று திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய உலக சமுதாய சேவா சங்கத்தின் திருச்சி மண்டலம் தலைவர் அ/நி.SKM அவர்களால் அப்போதைய நகர மேயராக இருந்த திருமதி. சாருபாலா தொண்டைமான் அவர்கள் முன்னிலையில் துவக்கப்பட்டது.
தற்காலிக தலைவராக விஜயா லாட்ஜ் அ/நி .A S சுந்தரம் ஐயா அவர்களை நியமித்து பிறகு அ/நி G.ஆறுமுகம் (மண்ணச்சநல்லூர்) அவர்களைத் தலைவராகவும், அ/நி K பரசுராமன் (திருச்சி) அவர்களை செயலாளராகவும் மற்றும் சிறிது காலம் வீணை S சிவக்குமார்( ஸ்ரீரங்கம்) அவர்களை பொருளாளராகவும் பிறகு அ/நி ஜம்புலிங்கம் அவர்களை பொருளாளராகவும் கொண்டு இரண்டு செயல் அலுவலர்கள்மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் கொண்டு 12 அறக்கட்டளைகளுடன் மண்டலம் சிறப்பாக செயல்படத் துவங்கியது.



Sitting – WCSC President Padmasri SKM with A/N A S Sundaram Standing A/N Parasuraman, A/N G Arumugam & A/N Jambulingam).
பிறகு அ /நி K பரசுராமன் அவர்களைத் தலைவராகவும், அ /நி தியாகராஜன் ( பெரம்பலூர் ) அவர்களை செயலாளராகவும் மற்றும் அ /நி ஜம்புலிங்கம் அவர்களை பொருளாளராகவும் கொண்டு நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டது.
இக்காலக்கட்டத்தில் மணப்பாறை, முசிறி, பெரம்பலூர், புதுக்கோட்டை, பெல் போன்ற இடங்களில் அறிவுத்திருக்கோயில்கள் திறக்கப்பட்டன.
2011 இறுதியில் அ/நி மாலா ஜெயப்பிரகாஷ் அவர்களைத் தலைவராகவும், அ /நி தட்சிணாமூர்த்தி அவர்களை செயலாளராகவும் மற்றும் அ /நி அருணாச்சலம் அவர்களைப் பொருளாளராகவும் கொண்டு மண்டலம் திருச்சி வேதாத்திரி நகர் பெல் அறிவுத் திருக்கோயிலில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. 2017 முதல் மண்டலச் செயலாளராக அ/நி சேது.காளிதாசன்( திருச்சி அண்ணா நகர்) பொறுப்பேற்றுள்ளார்.
இக்காலக்கட்டத்தில் மண்டல வளர்ச்சிக்கென்று ஒரு வாகனம்( ஓட்டுனரும்) WCSC தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
தற்போது திருச்சி மண்டலத்தில் 20 அறக்கட்டளைகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. 13 அறிவுத்திருக்கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. 2 அறிவுத்திருக்கோயில்கள் 2019ல் திறக்கப்பட உள்ளன. மூன்று இடங்களில் அறிவுத்திருக்கோயில்களுக்காக இடம் வாங்கப்பட்டுள்ளது.
இதுவரை மண்டலத்தில் 17 இடங்களில் கிராமிய சேவைத் திட்டம் துவங்கப்பட்டு 15 இடங்களில் நிறைவு பெற்றுள்ளது.